‘வெங்கட்பிரபு முன்னணி இயக்குனராக காரணம் சமுத்திரக்கனி!’ - கங்கை அமரன்

‘வெங்கட்பிரபு முன்னணி இயக்குனராக காரணம் சமுத்திரக்கனி!’ - கங்கை அமரன்

செய்திகள் 7-Jul-2014 2:28 PM IST Inian கருத்துக்கள்

'பிரைட் ஃபியூச்சர் மூவி மேக்கர்ஸ்' சார்பாக பி.எ.பிரகாசம் தயாரித்துள்ள படம் ‘என்ன பிடிச்சிருக்கா’. 30- வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் தனிப் புகழ் பெற்று விளங்கிய நடன நடிகை அனுராதாவின் மகன் கெவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பிரீத்தி விஜ் நடித்துள்ளார். இயக்குனர்கள் விக்ரமன், ரவிமரியா ஆகியோரிடம் இணை இயக்குனராக பாணியாற்றிய சுப்புராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் தேவா உட்பட பலரிடம் 15 வருடங்களாக பாடகியாகவும், இசைக் கலைஞராகவும் இருந்த ஶ்ரீவித்யா கலை இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘என்ன பிடிச்சிருக்கா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தாணு, தேவா, கங்கை அமரன், சமுத்திரக்கனி, ஜி.கே., அபிநயஶ்ரீ, ரவிமரியா, விவேகா, டிஸ்கோ சாந்தி, அவருடைய தங்கை லலிதாகுமாரி, ‘டைகர்’ ஆடியோ நிறுவனத்தின் அதிகாரிகள் சரண்யா, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ‘என்ன பிடிச்சிருக்கா’ படத்தின் முதல் இசைத் தட்டை கங்கை அமரன் முன்னிலையில் தாணு வெளியிட, தேவா பெற்றுக்கொண்டார்.

விழாவில் கங்கை அமரன் பேசும்போது. ‘‘வெங்கட்பிரபு இன்றைக்கு முன்னணி இயக்குனராக விளங்குவதற்கு இயக்குனர் சமுத்திரக்கனி தான் காரணம். அவருடைய ‘உன்னைச் சரணடைந்தேன்’ படத்தில் நடித்ததன் மூலமாக தான் அவர் சினிமாவை முதன் முதலில் பார்த்தார். சினிமாவை அவரிடமிருந்தே வெங்கட் பிரபு கற்றுள்ளார். அதற்காக சமுத்திரக்கனிக்கு நன்றி சொல்கிறேன்.

‘என்ன பிடிச்சிருக்கா’ படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீவித்யா கலை ஒரு பாடகி, இசைக் கலைஞர் என்பது சந்தோஷமான விஷயம். பல்வேறு இசையமைப்பாளர்களிடம் அவர் பணி புரிந்துள்ளதால் அவருக்கு நல்ல ஸ்வரங்களை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரியும். நானும், அண்ணன் இளையராஜா அவர்களும் இசையமைப்பாளர்களாக வருவதற்கு முன் பல இசையமைப்பாளர்களிடம் வாத்தியக் கலைஞர்களாக பணிபுரிந்தோம். பல மலையாள இசையமைப்பாளர்களிடமும், ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் உட்பட பலரிடம் பணிபுரிந்த அனுபவமே எங்களை நல்ல இசையமைப்பாளர்களாக உருவாக்கியது.
கம்ப்யூட்டரில் இசையமைப்பவர்களெல்லாம் நல்ல இசையமைப்பாளர்களாக உருவாக முடியாது. கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்தால் போதும், இசையமைப்பாளராகி விடலாம். ஆனால் நிலைக்க முடியாது. ஸ்வரம் தெரிந்து, ரசித்து மெட்டு போடும்போது தான் நல்ல இசையும், இசையமைபாளரும் உருவாகுவார்கள். ‘என்ன பிடிச்சிருக்கா’ பட்த்தின் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வரிகளும் தெளிவாக கேட்கிறது. அனுராதாவின் மகன் கெவினுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;