‘லிங்கா’வுக்காக பிரம்மாண்ட ரயில் செட்!

‘லிங்கா’வுக்காக பிரம்மாண்ட ரயில் செட்!

செய்திகள் 7-Jul-2014 1:22 PM IST Top 10 கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படம் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியிலும் மற்றும் அங்குள்ள கிராமம் ஒன்றிலும் ‘லிங்கா’விற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நாளை சென்னை திரும்புகிறதாம் ‘லிங்கா’ டீம். ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, ஒரு காட்சிக்காக கிராமத்துக்கு நடுவே ரயில் ஒன்று வந்து நிற்பதுபோல் செட் போடப்பட்டு, அதில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, வில்லன் தேவ் கில் ஆகியோர் பங்குபெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாம். ‘லிங்கா’ கதைப்படி இந்தக் காட்சிகள் 1940க்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் இன்னொரு நாயகியான அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பின்போது படமாக்கப்படலாமாம்.

ஏ.ஆர்.ரஹ்மான இசையில் உருவாகிவரும் ‘லிங்கா’ படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;