தனுஷ் படங்களை வாங்கிக் குவிக்கும் சன் டிவி!

தனுஷ் படங்களை வாங்கிக் குவிக்கும் சன் டிவி!

செய்திகள் 7-Jul-2014 11:53 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ் தனது 25-ஆவது படமாக நடித்து, தயாரித்துள்ள ‘வேலையில்லா பாட்டதாரி’ படம் மிக விரைவில் ரிலீசாகவிருக்கிறது. அத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அநேகன்’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த இரண்டு படங்களின் சாட்லைட் உரிமையையும் சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியாகி தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்ற ‘ஆடுகளம்’, இப்படத்திற்கு முன் வெளியான ‘மாப்பிள்ளை’, ‘யாரடி நீ மோகினி’, ’படிக்காதவன்’, ‘வேங்கை’ உட்பட தனுஷ் நடித்த 25 படங்களில் பெரும்பாலான படங்களின் சாட்லைட் உரிமையையும் சன் டிவி நிறுவனம் தான் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;