6 தயாரிப்பாளர்கள் இணையும் ‘ட்ரீம் ஃபேக்டரி’

6 தயாரிப்பாளர்கள் இணையும் ‘ட்ரீம் ஃபேக்டரி’

செய்திகள் 7-Jul-2014 11:38 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக விளங்கும் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமார், ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ எல்ரெட் குமார், ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த், ‘அபி அன்ட் அபி’ அபினேஷ் இளங்கோவன், ‘பிரின்ஸ் பிக்சர்’ லக்ஷ்மன் குமார் ஆகியோர் இணைந்து ‘ட்ரீம் ஃபேக்டரி’ என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் புதிய தமிழ்த் திரைப்படங்களை வாங்கி, விநியோகம் செய்து, அதற்கான மார்க்கெட்டிங் வேலைகளையும் செய்ய இருக்கிறார்களாம். முதல் கட்டமாக விரைவில் வெளிவரவிருக்கும் ‘சரபம்’, ‘மெட்ராஸ்’, ‘யான்’, ‘காவியத்தலைவன்’, ‘லூசியா’ போன்ற படங்களை ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுபோல் பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்கத் தொடங்கியிருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;