'தமிழைக் கட்டாயமொழிப் பாடமாக்க வேண்டும்!’ - சிவகுமார்

'தமிழைக் கட்டாயமொழிப் பாடமாக்க வேண்டும்!’ - சிவகுமார்

செய்திகள் 7-Jul-2014 10:18 AM IST VRC கருத்துக்கள்

1979-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஶ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 34 ஆண்டுகளை கடந்து 35-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வழக்கம்போல எளிமையாக நடந்த இந்த 35-வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னை உமாபதி அரங்கில் நேற்று நடந்தது. ஶ்ரீ சிவகுமார் அறக்கட்டளை நிறுவனர் சிவகுமார், அகரம் ஃபவுன்டேஷன் நிறுவனர் சூர்யா, தாய்த் தமிழ் பள்ளியை சேர்ந்த கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார் இறைவணக்கம் பாடி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அகரம் ஃபவுன்டேஷனின் செயலாளர் ஜெயஶ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, எஸ்.ஆர்.பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய, பல்வேறு நிலையில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 25 பேருக்கு ரூபாய் 2,50,000 வழங்கப்பட்டது. தாய் தமிழ் பள்ளிக்கு 1 லட்சமும், வாழை இயக்கத்திற்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய சிவகுமார், ‘‘கல்வி மட்டும் தான் ஒவ்வொரு குடும்பத்தின் சூழலையும் மாற்றும் சக்தி கொண்டது. நன்றாக படிக்கும் திறன் கொண்டவர்கள் ஏழைக்குடும்பத்தில் பிறந்து படிப்பதற்கு எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். என்னைப்போன்று ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதில் நான் மனநிரைவு அடைகிறேன். தாய் மொழி என்பது அம்மா போன்றது, ஆங்கிலம் என்பது மனைவி போன்றது. உலகம் இன்று சுருங்கிவிட்ட நிலையில் நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், பல்வேறு நடப்புகளையும், விஷயங்களையும் அறிந்து கொள்ள ஆங்கிலம் அவசியம். அதே நேரத்தில் நாம் தாய் மொழியையும் மறந்து விடமுடியாது. மற்ற மாநிலங்களில் அவரவர் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டமும் இருக்கிறது. நமக்கு அது இல்லை. தமிழை கட்டாயமாக படிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்ததோடு தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;