வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவின் ‘மாஸ்’!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவின் ‘மாஸ்’!

செய்திகள் 7-Jul-2014 10:15 AM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) அன்று பூஜை போடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இதுவரை டைட்டில் எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. தற்போது ‘மாஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக எமி ஜாக்சனும் நடிக்கிறார். அதோடு வழக்கம்போல் அண்ணனின் படத்தில் தம்பி பிரேம்ஜியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ படங்களைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;