சேரனின் பாரசீக ரோஜா!

சேரனின் பாரசீக ரோஜா!

செய்திகள் 7-Jul-2014 10:11 AM IST Inian கருத்துக்கள்

'நியூ டிவி' சார்பில் ஹரிகுமார், சனல் தோட்டம் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘திருந்துடா காதல் திருடா’. இப்படத்தை இயக்கியுள்ளவர் அசோக் ஆர். நாத். ஆதில், சுதக்‌ஷினா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் சேரன் கலந்துகொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய சேரன்..

‘‘இந்தியாவிலிருந்து வேலைக்கு செல்பவர்களின் சுக துக்கங்களை சொல்லும் படம் இது. மூன்று தலை முறையினரை பற்றிய காதலை சொல்லியிருக்கிறார்கள். துபாய் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். அது தவறு. அங்கே பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். இயந்திரங்களை விட மோசமான நிலை மனிதர்களுக்கு. பலர் அடிமையாக இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். இதை மைய்யப்படுத்தி ‘பாரசீக ரோஜா’ என ஒரு படமெடுக்கவிருந்தேன். ஆனால் அது முடியாமல் போயிற்று.
இப்படத்தின் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் எனக்கு நன்கு தெரியும். சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு கதை சொல்லி இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க என்னை அணுகி 5 லட்சம் அட்வான்சும் கொடுத்தனர். நாட்கள் போயிற்று. அட்வான்சை இன்றுவரை திருப்பி கேட்கவில்லை. நான் தொடர்பு கொண்டபோது இன்னொரு நடிகர் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் எடுக்கலாம் என்றனர். அவர்கள் தற்போது இரண்டு மொழிகளில் தயாரித்து, வெளியாகவுள்ள ’திருந்துடா காதல் திருடா’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;