சிங்கம் – அஞ்சான் ஒற்றுமை!

சிங்கம் – அஞ்சான் ஒற்றுமை!

செய்திகள் 5-Jul-2014 12:09 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘சிங்கம் 2’. இப்படம் சென்ற ஆண்டு (2013) இதே தினம் (ஜூலை-5) வெளியானது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 15-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ‘அஞ்சான்’. சூர்யாவின், ‘சிங்கம் 2’ வெளியாகி சரியாக ஒரு ஆண்டு ஆகிற இந்நாளில் சூர்யாவின் ’அஞ்சான்’ பட டீஸர், இன்று சென்னையில் நடைபெறவிருக்கிற விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் வெளியாகவிருப்பதால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சூர்யாவின் ‘சிங்கம்’ மற்றும் ‘அஞ்சான்’ படத்தின் இந்த ‘ஜூலை 5’ ஒற்றுமை இனி வரும் ஆண்டுகளிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;