’பூஜை’யில் சத்யராஜுக்கு மாறுபட்ட கெட-அப்!

’பூஜை’யில் சத்யராஜுக்கு மாறுபட்ட கெட-அப்!

செய்திகள் 5-Jul-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘பூஜை’ படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ் பவர்ஃபுல் கேர்கடர் ஒன்றில் நடிக்கிறார். இந்த கேரக்டர் குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது, ‘‘பூஜை’ படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியானதும், இந்த கேர்கடருக்கு சத்யராஜ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்கு தோன்றியது. ‘நூறாவது நாள்’, ‘வால்டர் வெற்றிவேல்’ போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்தது மாதிரியான ஒரு வேடம் இது. இந்த கேர்கடர் அவருக்கும், ரசிகர்களுக்கும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுக்கும்’’ என்றார். இந்தப் படத்தை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;