‘‘தோற்றவர்களுக்கும் கைகொடுங்கள்!’’ - கே.ஆர்.

‘‘தோற்றவர்களுக்கும் கைகொடுங்கள்!’’ - கே.ஆர்.

செய்திகள் 4-Jul-2014 1:18 PM IST Inian கருத்துக்கள்

பிரபல இணையதள பதிவர் கேபிள் சங்கர் இயக்குனராக அறிமுகமாகும் ‘தொட்டால் தொடரும்’ படத்தை தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரின் எஃப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமன், அருந்ததி நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் பி.சி.சிவன். இப்படத்தின் இசை வெளியீட்டு இன்று (4-7-2014) காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆர். ‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஆடியோ சிடியை வெளியிட, அதனை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பெற்றுக் கொண்டார். மேலும் இவ்விழாவில் ‘யுடிவி’ தனஞ்செயன், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரகேசரன், கவிஞர் மதன் கார்க்கி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வின்சென்ட் அசோகன் உள்பட பல பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், ‘‘இப்படத்தின் இயக்குனர் கேபிள் சங்கரை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஆனால், அவர் எழுதும் விமர்சனங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதேபோல் அவர் எழுதிய ‘சினிமா வியாபாரம்’ புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். அவர் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!’’ என்றார்.

அடுத்ததாகப் பேசிய கே.ஆர். ‘‘இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆரம்பத்தில் வீடியோ கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்துதான் சினிமாவில் இயக்குனராகி ஜெயித்தார். இயக்குனர் கேபிள் சங்கரும் ஆரம்பத்தில் கேபிள் துறையில்விட்டுதான் சினிமாவிற்கு வந்திருக்கிறார். எனவே அவரைப்போல் இவரும் ஜெயிப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் இதுவரை 5 படங்களைத் தயாரித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் புதுமுகங்களை வைத்தே படமெடுப்பார். ஆனால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் சில தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களை மட்டும் வைத்தே படமெடுத்து வருகிறார்கள். புதுமுகங்களையும், தோற்றவர்களையும் வைத்து படமெடுத்தால் அவர்களுக்கும் வாழ்வில் முன்னேற வழி பிறக்கும்!’’ என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;