‘ஐ’ பாடல்கள் எப்போது? - ஏ.ஆர்.ரஹ்மான்

‘ஐ’ பாடல்கள் எப்போது?  - ஏ.ஆர்.ரஹ்மான்

செய்திகள் 4-Jul-2014 1:14 PM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் ‘ஐ’ படத்தின் வேலைகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான், ‘இப்படத்தின் அனைத்து பாடல்களின் வேலைகளையும் முடித்துவிட்டு ‘மாஸ்டர் காப்பி’யை கொடுத்து விட்டேன், விரைவில் பாடல்கள் வெளியாகும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஒரு சில நாட்களுக்கு முன் தான் இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இப்போது படத்தின் இறுதி கட்ட வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் இயக்குனர் ஷங்கர், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் மற்றும் ஆடியோவை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) வெளியிட திட்டமிட்டு, அதற்கான வேலைகளையும் துரிதப்படுத்தியுள்ளாராம். அடுத்த மாதம் ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததும், படத்தை செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்! விக்ரம், ஆமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;