ஆகஸ்டில் தல 55 டீஸர்!

ஆகஸ்டில் தல 55 டீஸர்!

செய்திகள் 4-Jul-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித்தின் 55-ஆவது படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார் அல்லவா? இந்தப் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸ்ரை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முதலாக நடிக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் அருண் விஜய், விவேக் முதலானோரும் இணைந்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். அஜித் நடித்த படங்களிலேயே இப்படத்தின் வியாபாரப் பேச்சுக்கள் இப்போதே பெரிய அளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;