ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் வெற்றி பெறுவாரா?

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் வெற்றி பெறுவாரா?

செய்திகள் 3-Jul-2014 3:04 PM IST Inian கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்ராஜ். தற்போது தனுஷின் 25-வது படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தினை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். தனுஷ் நடித்த ‘மரியான்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனதால் அவரது ரசிகர்கள் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். தனுஷ், அமலாபால், விவேக் காம்பினேஷனில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபலமான ஒளிப்பதிவாளர்களாக விளங்கி, இயக்குனர்களாக பிராகாசித்த பாலுமகேந்திரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டவர்களின் வரிசையில் வேல்ராஜும் இடம்பெறுவாரா? என்ற கேள்விக்கு பிரபல விநியோகஸ்தர் ஒருவர் கூறும்போது, ‘‘தனுஷின் வழக்கமான ஃபார்முலாவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தனுஷின் ரசிகர்களை கவர்வதுடன் தனுஷுக்கு ஒரு முக்கியமான படமாகவும் அமையும். அத்துடன் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கினருக்கும் லாபம் தரும் படமாகவும் அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;