ஜூலை 11-ல் வெளியாகிறது ‘பப்பாளி’

ஜூலை 11-ல் வெளியாகிறது ‘பப்பாளி’

செய்திகள் 3-Jul-2014 2:53 PM IST Inian கருத்துக்கள்

‘அரசூர் மூவீஸ்’ பட நிறுவனம் சார்பாக எஸ். அம்பேத்குமார், A .ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பப்பாளி'. இப்படத்தில் ‘சரவணன் மீனாட்சி’ தொலைக்காட்சி தொடர் புகழ் செந்தில் கதாநாயகனாகவும், கதாநாயகியாக இஷாராவும் நடித்துள்ளனர். கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்துள்ளார். இதுவரை அம்மா வேடத்தில் நடித்து வந்த சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் மாமியாராக நடித்துள்ளார். ‘பப்பாளி’ படம் பற்றி இயக்குனர் A.கோவிந்தமூர்த்தி கூறியதாவது, ''மாமியார் என்றாலே கொடுமைக்காரி தான் என்று சித்தரிக்கப்பட்டு வரும் சினிமாவில், மாமியாரை நல்லவராக சித்தரித்திருக்கிறோம். இப்படத்தில் நடித்துள்ள சரண்யா இனிமேல் நல்ல அம்மா மட்டுமல்ல, நல்ல மாமியார் என்றும் பாராட்டப்படுவார்.

படிப்பின் முக்கியத்துவத்தையும், எடுத்துக் கொள்கிற ஒரு லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருக்கும் எந்த தடைக் கல்லானாலும் அதை அகற்றி வெற்றிகொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் இதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். இந்த இரண்டு நல்ல கருத்துக்களை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கி இருக்கிறோம். நிச்சயம் இப்படம் ரசிக்கும் படியான நல்ல படமாக இருக்கும்’’ என்றார். இப்படம் இம்மாதம் 11- ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - அடி வாடி திமிரா பாடல்


;