ஜெயம் ரவி - அஞ்சலி காதலுக்கு வில்லனாகும் சூரி!

ஜெயம் ரவி - அஞ்சலி காதலுக்கு வில்லனாகும் சூரி!

செய்திகள் 3-Jul-2014 12:02 PM IST Chandru கருத்துக்கள்

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 27வது படத்தை இயக்குகிறார் இயக்குனர் சுராஜ். ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். 2 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் களமிறங்கும் நடிகை அஞ்சலி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னுமொரு ஹீரோயினுக்கான வேட்டை நடைபெற்று வருகிறதாம். அதோடு, இப்படத்தில் ‘சின்னப்பட்டி சின்னசாமி’ என்ற முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் சூரி. வெறும் காமெடியன் என்பதைத் தாண்டி, படம் முழுவதும் ஹீரோ ஜெயம் ரவியுடன் வலம் வரும் கேரக்டராம் இது.

அதாவது, இப்படத்திற்குப் பிறகு சூரியின் மார்க்கெட் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ லெவலுக்கு உயர்ந்துவிடும் என்கிறார்கள். முதல் பாதி கிராமத்திலும், இரண்டாம் பாதி சிட்டியிலும் நடக்கும் இப்படத்தின் கதையில் கிராமத்து கிளாமர் தேவதையாக நடிக்கிறாராம் அஞ்சலி. அவரை சுற்றிச் சுற்றி வந்து காதலிக்கும் ஜெயம் ரவியைக் கண்டு கோபம் கொள்ளும் சூரி அதைத் தடுப்பதற்கு என்னென்ன கலாட்டாக்கள் செய்கிறார் என்பதை காமெடியாகச் சொல்லப் போகிறாராம் இயக்குனர் சுராஜ். வடிவேலுவுக்கு ஒரு ‘நாய் சேகர்’ போல, விவேக்கிற்கு ஒரு ‘அசால்ட்டு ஆறுமுகம்’ போல சூரிக்கு ‘சின்னப்பட்டி சின்னசாமி’ கேரக்டர் நீண்ட நாள் பேசப்படுமாம்.

இன்று சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் யு.கே.செந்தில் குமார். புதுமுகம் செல்வா எடிட்டிங் வேலைகளை கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;