எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் நடிப்பது பெருமை! - ஐஸ்வர்யா ராஜேஷ்

எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் நடிப்பது பெருமை!  - ஐஸ்வர்யா ராஜேஷ்

செய்திகள் 3-Jul-2014 11:34 AM IST Inian கருத்துக்கள்

தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நடனப் போட்டி மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தினேஷுடன் இணைந்து நடித்து, விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘திருடன் போலீஸ்'. இத்திரைப்படம் குறித்து அவர் கூறியபோது, ‘'இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. ஆர்டிஸ்டிடம் இருந்து வேலை வாங்குவதில் வல்லவர். அந்த வகையில் என்னையும், தினேஷையும் சிரிக்க வைத்தே வேலை வாங்கி விட்டார். படம் முழுக்க மிகவும் யதார்த்தமான நகைச்சுவை கலந்திருக்கும். தமிழ் திரையுலகில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்த எஸ்.பி.பி.சரண் அவர்களின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ‘திருடன் போலீஸ்’ எனது சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும். டீஸரை பார்த்தபோது விழுந்து விழுந்து சிரித்தேன். இப்படத்தை பார்க்கும் அனைவரும் நிச்சயமாக சிரிப்பார்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;