விஜய் சேதுபதியின் ‘பகீர்’ கேரக்டர்!

விஜய் சேதுபதியின் ‘பகீர்’ கேரக்டர்!

செய்திகள் 3-Jul-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு படத்திலும், தான் ஏற்கும் வித்தியாசமான கேரக்டர்களால் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெறுபவர் நடிகர் விஜய் சேதுபதி. ‘என்னாச்சு....’ என சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்ன பிரேம் குமாராகட்டும், 5 ரூல்ஸ் போட்டு அசால்டாக ஆட்களை கடத்திய தாஸாகட்டும், இல்லையென்றால்.... டிரைவராகக் களமிறங்கி பத்மினி காரையே காதலித்த முருகேசனாகட்டும் எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் மனிதர் கில்லாடி.

தற்போது அவரே தயாரித்து நடிக்கும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் இதற்கு முன்பு தான் செய்த கேரக்டர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அப்படி அவர் ஏற்றிருக்கும் ‘பகீர்’ கேரக்டர் என்ன என்கிறீர்களா...? 55 வயதான நோயாளியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. தான் ஒரு ஹீரோ என்பதைப் பற்றியெல்லாம் எந்தவித அலட்டலும் செய்யாமல் கதையின் நாயகனாக மாறிவிடும் விஜய் சேதுபதி, இந்த ‘ஆரஞ்சு மிட்டாயி’ல் நடிப்பு, தயாரிப்பு வேலையோடு வசனமும் எழுதுகிறாராம். இயக்குனர் பிஜு விஸ்வநாத் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன், ‘சூது கவ்வும்’ ரமேஷ், ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் கிளீனராக நடித்த ஆறுமுகம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;