ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவாரா சூர்யா?

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவாரா சூர்யா?

செய்திகள் 3-Jul-2014 10:19 AM IST Chandru கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. நாளை மறுநாள் (ஜூலை 5) நடக்கவிருக்கும் ‘விஜய் அவார்ட்ஸ்’ விழாவில் ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் டீஸர் வெளியிடப்படும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் ஜூலை 17ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமான வகையில் ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம். இந்த விழாவில் சூர்யாவின் ரசிகர்களை அதிக அளவில் பங்குபெறச் செய்யும் திட்டமும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறதாம்.

இந்நிலையில், ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா, சமந்தா பங்குபெறும் டூயட் பாடல் ஒன்றிற்கு சூர்யா பின்னணி பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே விளம்பரப் படம் ஒன்றில் பாடியுள்ள சூர்யா, திரைப்படத்திற்காக பாடுவது இதுவே முதல் முறை. நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை, ‘அஞ்சான்’ இசைவெளியீட்டு விழா மேடையில், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் சூர்யா நேரடியாகப் பாடுவார் என தற்போது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;