சூர்யாவுடன் இணையும் ‘பசங்க’ பாண்டிராஜ்!

சூர்யாவுடன் இணையும் ‘பசங்க’ பாண்டிராஜ்!

செய்திகள் 2-Jul-2014 4:36 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சூர்யா ‘2டி என்டர்டெயின்மென்ட்’ என்ற புதிய பட நிறுவனம் ஒன்றை சமீபத்தில் துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தரமான படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள சூர்யா, முதன் முதலாக குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை பாண்டிராஜே இயக்கவும் செய்கிறார். இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்த விழாவில் நடிகர் சூர்யா கேமராவை இயக்கி முதல் காட்சியின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் துவக்கவிழா புகைப்படங்களில் நடிகை பிந்து மாதவியும் இருப்பதால் அவரும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்! ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் பிந்து மாதவி நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;