அஜித்தைப் போல வெற்றி பெறுவார் பரத்! - இயக்குனர் சரண்

அஜித்தைப் போல வெற்றி பெறுவார் பரத்! - இயக்குனர் சரண்

செய்திகள் 2-Jul-2014 2:27 PM IST Inian கருத்துக்கள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பரத். ‘செல்லமே’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அடுத்ததாக வெளிவந்த ‘காதல்’ படத்தில் அனைவரையும் கவர்ந்து, குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றார். அதன் பிறகு ‘பட்டியல்’, ‘எம் மகன்’, ‘வெயில்’ போன்ற படங்கள் பரத்திற்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமைந்தது. தமிழ் சினிமாவில் கவனிக்கத் தக்கவர்களில் ஒருவரான இவரின் 25- படமாக தயாராகியுள்ள படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. இது 25-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள முழுநீள நகைச்சுவை படம். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை நடந்தது.

இவ்விழாவில் கலந்து கொண்டு முதல் ஆடியோ சி.டி-யை பாலசந்தர் வெளியிட, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார். ட்ரைலரை நல்லிகுப்புசாமி வெளியிட, இயக்குனர் சரண் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு சரண் பேசும்போது, ‘‘எனது இயக்கத்தில் வெளிவந்த ‘அமர்க்களம்’ படம், அஜித்தின் 25-ஆவது படம். இந்தப் படம் எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல் பரத்தின் 25-ஆவது படமாக அமைந்துள்ள ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படமும் பரத்திற்கு சிறப்பான படமாக அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;