‘கத்தி’, ‘பூஜை’யுடன் தீபாவளி ரேஸில் ‘அனேகன்’?

‘கத்தி’, ‘பூஜை’யுடன் தீபாவளி ரேஸில் ‘அனேகன்’?

செய்திகள் 2-Jul-2014 12:07 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ‘கத்தி’ படமும், ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற அறிவிப்போடு உருவாகி வருகின்றன. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் பல மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘அனேகன்’ படத்தையும் தீபாவளி அன்றே வெளியிட திட்டமிட்டு வருகிறதாம் படக்குழு.

தற்போது பால்கியின் இயக்கத்தில் ‘ஷமிதாப்’ ஹிந்தி படத்திலும், தமிழில் ‘அனேகன்’ படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். சமீபத்தில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறு காயத்தால், தற்காலிமாக ஷூட்டிங் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் மீண்டும் படப்பிடிப்பில் களமிறங்கிவிட்டாராம். நேற்று முதல் ‘அனேகன்’ படத்திற்கான க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வருகிறதாம். கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் இந்த மாதத்திற்குள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்குச் செல்ல தயாராகி வருகிறதாம் ‘அனேகன்’ டீம்! அவர்கள் நினைத்தபடி எல்லாம் சரியாக நடக்குமேயானால் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் எந்த மாற்றமும் இருக்காதாம். இதனால் இந்த தீபாவளிக்கு கத்தி, பூஜை, அனேகன் என மூன்று பெரிய படங்கள் ரீலிஸாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;