ஜூலையில் ரிலீசாகும் 15 படங்கள்!

ஜூலையில் ரிலீசாகும் 15 படங்கள்!

செய்திகள் 2-Jul-2014 11:57 AM IST VRC கருத்துக்கள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் முடிய கிட்டத்தட்ட 100 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் லாபம் சம்பாதித்து தந்த படங்கள் எத்தனை என்றால் அது விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேதான் இருக்கிறது. இது தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிர்ச்சி தரும் ஒரு புள்ளி விவர கணக்குதான்! நிலைமை இப்படியிருந்தாலும், நாளுக்கு நாள் தயாராகும் படங்களின் எண்ணிக்கை, வெளியாகிக் கொண்டிருக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு எந்த குறைவும் இல்லை என்றே சொல்லலாம். இது ஒரு வகையில் வரவேற்கப்பட வேண்டிய, மகிழ்ச்சி தரும் விஷயம் தான்! ஆனால் இப்படி வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கை கூடினால் மட்டுமே அது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமாக அமையும்.

இந்த மாதம் கிட்டத்தட்ட 15 படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறதாம். இதில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘அரிமா நம்பி’ ஜூலை 4-ஆம் தேதியும், ஞான ராஜசேரகர் இயக்கியுள்ள ‘ராமானுஜன்’, லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள ‘நளனனும் நந்தினியும்’ ஆகிய படங்கள் 11-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த படியாக தனுஷ் தயாரித்து, நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி, ‘ஜெயம்’ ரவியின் ‘பூலோகம்’ ஆகிய படங்கள் 18-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படங்கள் தவிர கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ்’, கரண் ஹீரோவாக நடித்துள்ள ‘சூரன்’, ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘நம்பியார்’, விஜய் ஆன்டனி நடித்துள்ள ‘சலீம்’, சித்தார்த் ஹீரோவாக நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’, மனோபாலா தயாரித்துள்ள ‘சதுரங்க வேட்டை’, நவீன் சந்திரா நடித்துள்ள ‘சரபம்’, கஞ்சா கருப்பு தயாரித்து நடித்துள்ள ‘வேல்முருகன் போர்வெல்’ ‘மிர்ச்சி’ செந்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ‘பப்பாளி’ என பல படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன! இந்தப் படங்களில் எந்தெந்த படங்கள் இந்த மாதம் வெளியாகும், எந்தெந்த படங்கள் வெற்றிபெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வசூலை அளிக்கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை என்கிற மெட்ராஸ் - டிரைலர்


;