‘ஐ’-ல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் அனிருத்!

‘ஐ’-ல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் அனிருத்!

செய்திகள் 1-Jul-2014 5:57 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளை படம் பிடித்தால் மொத்தப் படமும் முடிந்து விடும் என்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் மற்றுமொரு பாடல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று ஷங்கர் நினைத்திருக்கிறார் போலும்! இதனை தொடர்ந்து உருவாக்கிய அந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசை அமைப்பாளர் அனிருத்தை பாட வைத்து பதிவும் செய்து விட்டார்! எப்போதும் தனது இசையில் பாடி வரும் அனிருத், ஏற்கெனவே டி.இமான் இசையிலும், யுவன்சங்கர் ராஜா இசையிலும் பாடல்களை பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹமான் இசையில் அனிருத் பாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;