நடன இயக்குனரின் ஒரு குப்பைக் கதை!

நடன இயக்குனரின் ஒரு குப்பைக் கதை!

செய்திகள் 1-Jul-2014 1:08 PM IST Inian கருத்துக்கள்

‘ஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. இப்படத்தின் மூலம் ‘பாகன்’ படத்தின் இயக்குனர் அஸ்லாம் தயாரிப்பாளர் ஆகிறார். 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இவர், ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிட்தக்கது. மனிஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

‘ஒரு குப்பைக் கதை’ படம் பற்றி தினேஷ் கூறியதாவது, "மிக அழுத்தமான, அதே சமயம் எனக்கு பொருத்தமான கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நடனத்தையும் தொடர்ந்து கொண்டு, கிடைக்கிற இடைவெளியில் இந்தப் படத்தை செய்து முடிக்கவுள்ளேன். எனக்கு நடனம் தான் முக்கியம்! இந்தப் படத்தை இயக்குனர் எழிலிடம் உதவியாளராக இருந்த காளிங்கசாமி இயக்குகிறார்.

படத்தோட தலைப்பை கேட்ட சிலர் ‘‘என்னப்பா படத்தை குப்பை கதைன்னு சொல்றேன்னு கேட்டாங்க.. படம் பார்க்கும்போது அல்லது படம் பார்த்துவிட்டு வெளியே வருகிற எல்லோரும் இந்தப் படத்துக்கு இந்த தலைப்பு தான் சரி என்று சொல்லிவிட்டு போவார்கள். அப்படி ஒரு நல்ல கதையைக் கொண்ட படம் இது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;