நட்புக்காக கெஸ்ட் ரோல்களில் கலக்கும் ஆர்யா!

நட்புக்காக கெஸ்ட் ரோல்களில் கலக்கும் ஆர்யா!

செய்திகள் 1-Jul-2014 12:25 PM IST VRC கருத்துக்கள்

ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஆர்யா, இப்போது, லக்‌ஷமன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ‘புறம்போக்கு’ ’மீகாமன்’, ‘யட்சன்’ என பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஆர்யா, நட்புக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பவர். ஜீவா, ‘ஜெயம்’ ரவி, விஷால், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராஜேஷ் உட்பட பலர் இவரது நட்பு வட்டத்தில் இருக்கும் முக்கியமானவர்கள்! ’ஜெயம்’ ரவிக்காக ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்த ஆர்யா, சுசீந்திரன் இயக்கும் ‘ஜீவா’ மற்றும் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம், இயக்கம்’ படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;