ஒட்டக பந்தயத்தில் கார்த்திகா!

ஒட்டக பந்தயத்தில் கார்த்திகா!

செய்திகள் 1-Jul-2014 10:57 AM IST Top 10 கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா முதலானோர் நடிக்கும் படம் ‘புறம்போக்கு’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜஸ்தானிலுள்ள ஜெய் சால்மரில் நடந்தது. ஜெய் சால்மர் ஒட்டகங்களை வைத்து போட்டி நடத்துவதில் புகழ்பெற்ற ஒரு ஊர்! அதன் அடிப்படையில் இப்படத்திலும் ஒரு ஒட்டகப் போட்டி இடம் பெறுகிறது. சமீபத்தில் இந்த காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்! இந்த காட்சியில் ஹீரோயின் கார்த்திகா ஒட்டகத்தை ஓட்டி வருவது மாதிரி படமாக்க வேண்டும் என்பதாலும், அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவும் கார்த்திகா ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்தி, அதனுடன் ஒரு சில நாட்கள் பயிற்சி பெற்று நடித்துள்ளார்! இந்தப் போட்டி கிட்டத்தட்ட 100 ஒட்டங்களை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கார்த்திகா கூறும்போது, ‘‘அந்தக் காட்சியில் நடித்தது த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ். ஒட்டகத்துடன் பயிற்சி பெற்று நடித்த முதல் நடிகை அனேகமாக நானாகதான் இருக்கும்’’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;