‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 30-Jun-2014 2:07 PM IST Top 10 கருத்துக்கள்

‘பருத்தி வீரன்’, ‘சிங்கம்’, ‘சிறுத்தை’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தும், ‘கும்கி’, ‘அட்டகத்தி’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘சூது கவ்வும்’ உட்பட பல வெற்றிப் படங்களை வினியோகித்தும், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம்! தற்போது கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ படத்தை தயாரித்துள்ள, இந்நிறுவன்ம் தெலுங்கிலும் சில வெற்றிப் படங்களை வழங்கி, அங்கும் புகழ்பெற்று விளங்கி வருகிறது! இந்த வெற்றிகளுக்கெல்லாம் சொந்தக்காரர் இந்நிறுவன தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா! இன்றைய தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றிப்பட தயாரிப்பாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராகவும் இருந்து வரும் ஞானவேல்ராஜா பிறந்த நாள் இன்று! ஏராளமான சினிமா பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;