பிரம்மாண்டமாய் ‘அஞ்சான்’ ஆடியோ விழா!

பிரம்மாண்டமாய் ‘அஞ்சான்’ ஆடியோ விழா!

செய்திகள் 30-Jun-2014 11:15 AM IST Top 10 கருத்துக்கள்

கோலிவுட்டின் தற்போதைய ‘டாப் மோஸ்ட்’ எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ’அஞ்சான்’. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், படத்தின் டீஸர் மற்றும் ஆடியோ எப்போது வெளியாகும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்! திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் டீஸரை வருகிற 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் விஜய் டிவி விருது வழங்கும் விழாவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கன் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் இரவு 10 மணி அளவில் வெளியிட இருக்கிறார்கள்! அதே நேரத்தில் யு-ட்யூபிலும் இப்பட டீஸர் வெளியாக இருக்கிறது! இதனை தொடர்ந்து ஜூலை 17- ஆம் தேதி ‘அஞ்சான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் ‘அஞ்சான்’ படக்குழுவினர்! இந்த விழாவில் ஏராளமான திரையுல பிரபலங்கள் உட்பட 4000-த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்! இதனை சென்னை ‘யுடிவி’ நிறுவன மேலாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;