ஹேப்பி பர்த்டே அரவிந்தசாமி!

ஹேப்பி பர்த்டே அரவிந்தசாமி!

செய்திகள் 30-Jun-2014 10:24 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் மணிரத்னத்தால் தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்கியவர் அரவிந்தசாமி! ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ படத்தில் ஒரு சிறிய கேர்கடரில் நடித்த அரவிந்தசாமியை, அடையாளம் காட்டிய படம் ‘ரோஜா’. இந்தப் படத்தின் மூலம் இமாலய புகழ்பெற்ற அரவிந்தசாமி, அப்போதையை இளம் கன்னியரின் கனவு நாயகனாக திகழ்ந்தார் என்பது சினிமா உலகமே அறியும்! அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவக நடித்து வந்தவர் பிறகு நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுத்து விட்டு சினிமாவிலிருநுது கொஞ்சம் ஒதுங்கியிருந்தார்! இந்நிலையில் அரவிந்த சாமியின் குருநாதர் மணிரத்னம், தான் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்! இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் அரவிந்தசாமி பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் அவருக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;