பாலாவை ஏமாற்றிய ஆர்யா!

பாலாவை ஏமாற்றிய ஆர்யா!

செய்திகள் 28-Jun-2014 12:16 PM IST Inian கருத்துக்கள்

தனது தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து ‘அமரகாவியம்’ படத்தை தயாரித்திருக்கிறார் நடிகர் ஆர்யா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (28-6-14) காலை சத்யம் திரையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாலா, விஷ்ணுவர்தன், எஸ்.பி.ஜனநாதன், கண்ணன், எம்.ராஜேஷ், படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர், நடிகர்கள் ஆர்யா, படத்தின் நாயகன் சத்யா, ஸ்ரீகாந்த், விஷ்ணு, உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், விஜய் ஆண்டனி, நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, படத்தின் நாயகி மியா ஜார்ஜ், பூஜா, லேகா வாஷிங்டன், ரூபா மஞ்சரி ஆகியோர் உட்பட தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இயக்குனர் பாலாவின் முன்னிலையில் நடிகை நயன்தாரா ‘அமரகாவியம்’ படத்தின் ஆடியோ சிடியை வெளியிட அதனை நடிகை த்ரிஷா பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குனர் பாலா பேசும்போது ‘‘ஆர்யாவின் தம்பியை நான்தான் அறிமுகப்படுத்தணும்னு நினைச்சிருந்தேன். இதைப்பத்தி ஆர்யாகிட்டயும் நான் சொல்லியிருந்தேன். ஆனா, என்கிட்டகூட சொல்லாம சத்யாவை ஜீவா ஷங்கர் டைரக்ஷன்ல நடிக்க வச்சுட்டாரு. அதனால கண்டிப்பா ஜீவா ஷங்கரோட கதை மேல வச்ச நம்பிக்கைலதான் இந்த முடிவை ஆர்யா எடுத்திருப்பாருன்னு தோணுது. நிச்சயம் இந்தப்படம் வெற்றியடையும்.

ஆர்யாவும் சத்யாவும் பிசினஸில் பெரிய கில்லாடிங்க. தமிழ்நாட்டுல எத்தனை தியேட்டர் இருக்குது, அந்த தியேட்டர்கள்ல எவ்வளவு பிசினஸ் நடக்குதுங்கிற புள்ளிவிபரங்களை விரல் நுனியில வச்சிருக்காங்க. அதனால அவங்கள பத்தி யாரும் பயப்படத் தேவையில்ல. கண்டிப்பா அவங்களோட இந்த முயற்சி வெற்றியடையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;