தனுஷின் சூப்பர் சாதனை!

தனுஷின்  சூப்பர் சாதனை!

செய்திகள் 28-Jun-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ், தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் ’வேலையில்லா பட்டதாரி’. ஏற்கெனவே இப்படத்தின் டீஸரும், ட்ரைலரும் வெளியான நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியாகி 10 நாட்கள் தான் இருக்கும்! அதற்குள்ளாகவே இந்த ட்ரைலரை கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் பாரத்துள்ளனர்! இதுவரை தனுஷ் நடித்த எந்தவொரு படத்தின் ட்ரைலருக்கும் கிடைத்திராத ஒரு வரவேற்பு ரசிகர்களிடமிருந்து இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் தனுஷ் மற்றும் இந்த படத்தை இயக்கியிருக்கும் வேல்ராஜ் உட்பட ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவினர். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்க, தனுஷின் ஆஸ்தான இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். தனுஷ் நடித்த படங்களிலேயே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;