‘சலீம்’ படத்தில் நடிக்கும் பிரேம்ஜி!

‘சலீம்’ படத்தில் நடிக்கும் பிரேம்ஜி!

செய்திகள் 28-Jun-2014 10:40 AM IST Chandru கருத்துக்கள்

‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது ‘சலீம்’ படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகர் பிரேம்ஜியும் நடித்திருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘‘மல்டி இன்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி அமரன் ‘சலீம்’ படத்தில் நடிக்கிறார்’’ என குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிப்பதற்காக ‘டோக்வான்டோ’ கலையை இரண்டு மாதம் கற்றுத் தேர்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;