தங்கப்பதக்கம் பெற்றவர் இயக்கும் படம்!

தங்கப்பதக்கம் பெற்றவர் இயக்கும் படம்!

செய்திகள் 28-Jun-2014 10:36 AM IST VRC கருத்துக்கள்

‘ஜித்தன் 2’ வெற்றி பெற்ற திரைப் படங்களின் இரண்டாம் பாகம் தயாராவதும், வெளியாவதும் தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஒரு விஷயம். அந்த வரிசையில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடித்த 'ஜித்தன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ’ஜித்தன் 2’ என்ற பெயரில் ஒரு படம் தயராகி வருகிறது. இந்தப் படத்திலும் கதாநாயகனாக ‘ஜித்தன்’ ரமேஷே நடிக்கிறார். மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே 'ஜித்தன்2' திரைப்படம் என்கிறார்கள். இப்படத்தின் மூலம் ராகுல் பரமஹம்சா புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தயாராகும் இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்கு தமிழில் இது முதல் படமாகும்.

மேலாண்மை கல்வியில் தங்கப் பதக்கம் வென்ற ராகுல் பரமஹம்சா படத்தை இயக்குவது மட்டுமல்லாமல்,சரியான முறையில் விளம்பரம் செய்து படத்தை வெளியிடுவதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

1 AM - வீடியோ


;