‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் அஞ்சலி!

‘ஜெயம்’ ரவியுடன் ஜோடி சேரும் அஞ்சலி!

செய்திகள் 28-Jun-2014 10:27 AM IST Top 10 கருத்துக்கள்

நடிகை அஞ்சலியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் அவர் சமீபகாலமாக எந்தத் தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், என்னை நடிக்க வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து படங்களில் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன் என்று சமீபத்தில் நடிகை அஞ்சலி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, நேற்று அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடிக்க, அவருடன் நடிக்க இருக்கிறார் அஞ்சலி! இந்தப் படத்தை ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்த ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான மற்ற நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;