'திருமணம் எனும் நிக்காஹ்' எப்போது ரிலீஸ்?

'திருமணம் எனும் நிக்காஹ்'  எப்போது ரிலீஸ்?

செய்திகள் 27-Jun-2014 3:50 PM IST Top 10 கருத்துக்கள்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. விரைவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ள இப்படம் குறித்து ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் விவரம் வருமாறு:

‘திருமணம் எனும் நிக்காஹ்’ எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எடுக்கப்பட்டவில்லை. ஒவ்வொரு மதத்துக்குள் இருக்கும் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் படம் தான் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. புரிதல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ள படம். கணவன், மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும், நண்பர்கள் இடையே ஆகட்டும், நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும் எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த 'புரிதல்' அவசியம். இப்படம் மதங்கள் இடையே கூட கலாச்சாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும். இந்தப் படத்தை சூழ்ந்திருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டது. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் இப்படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ, அதற்கு பிறகோ இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி Animals Gang - 2


;