ஷாருக்கானின் வித்தியாசமான கொள்கை!

ஷாருக்கானின் வித்தியாசமான கொள்கை!

செய்திகள் 27-Jun-2014 3:14 PM IST VRC கருத்துக்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பல சுவாரஸ்ய தகவல்களுக்கு சொந்தக்காரர்! அதன் அடிப்படையில் அவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் இதோ!

பாலிவுட் சினிமா ரசிகர்களை கவர்ந்து ஷாருக்கான் நடிக்கத் துவங்கி 22 ஆண்டுகள் ஆகிறது. இவர் நடித்த முதல் படமான ‘தீவானா’ வெளியான ஆண்டு 1992. (ஷாருக்கான் நடிப்பில் முதன் முதலாக தியேட்டர்களில் வெளியான படம் ‘தீவானா’ என்றாலும், அவர் நடித்த முதல் படம், நடிகை ஹேமா மாலினி முதன் முதலாக இயக்கிய ‘தில் ஆஷ்னா ஹே’ தான்!)

ஷாருக், இதுவரையிலும் தான் நடித்து, முதன் முதலாக திரைக்கு வந்து ஓடிய ‘தீவானா’ படத்தை பார்த்ததில்லையாம்! இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனது முதல் படத்தை பார்க்காதது, மாதிரி கடைசி படத்தையும் பார்க்க மாட்டேன் என்ற கொள்கையையும் அவர் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்!

‘ஃபௌஜி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் துவங்கி, பிறகு சினிமாவிலும் நடித்து, இன்று பாலிவுட்டின் வசூல் மன்னனாக திகழும் ஷாருக்கான் ‘தீவானா’ படத்தில் ரிஷிகபூருடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். ‘தீவானா’வை இயக்கியவர் ராஜ் கனவர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டிரைலர்


;