ரஹ்மான், மதன் கார்க்கிக்கு கிடைத்த அந்தஸ்து?

ரஹ்மான், மதன் கார்க்கிக்கு கிடைத்த அந்தஸ்து?

செய்திகள் 27-Jun-2014 10:19 AM IST Chandru கருத்துக்கள்

சமூக வலைதளங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ட்விட்டர்தான். இணையதளம் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களில் ட்விட்டரிலும் கணக்கு வைத்திருப்பார்கள். இந்தியாவிலும் பல பிரபலங்களும், அவர்களின் ரசிகர்களும் ட்விட்டரில் இருக்கிறார்கள். தங்கள் அபிமான நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ட்விட்டரில் அவர்களை பின்தொடர்ந்து (ஃபாலோ) வருகிறார்கள். தங்களைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தற்போது ஒரு முக்கிய அந்தஸ்தாக நட்சத்திரங்களால் பார்க்கப்படுகிறது. அதோடு தங்களைப் பற்றிய வதந்திகளுக்கும், பொய்யான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்த ‘ட்விட்டர்’தான் தற்போது முக்கியத்தூணாக இருக்கிறது. இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த ட்விட்டரில் யார் யாரெல்லாம் மிகப்பிரபலமாக இருக்கிறார்கள் என்ற லிஸ்ட் ஒன்றை எடுத்துள்ளது பின்ஸ்டோர்ம் ( www.pinstorm.com ) என்ற இணையதளம். அந்த லிஸ்ட்டில் முதல் 10 இடங்களைப் பிடித்திருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. நரேந்திர மோடி
2. தலாய் லாமா
3. அமிதாப் பச்சன்
4. ஷாருக் கான்
5. சல்மான் கான்
6. சச்சின் டெண்டுல்கர்
7. ஏ.ஆர்.ரஹ்மான்
8. பிரியங்கா சோப்ரா
9. அபிஷேக் பச்சன்
10. அக்ஷய் குமார்

ஒவ்வொருவரையும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, அவர்கள் பதிவிடும் ட்வீட்களின் எண்ணிக்கை, அந்த ட்வீட் எத்தனை முறை ரீட்வீட் செய்யப்படுகிறது. எத்தனை பேர் அதை விரும்புகிறார்கள் என்பன போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் கோலிவுட் பிரபலங்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் 7வது இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றொருவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி (89வது இடம்).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;