ரசிகர்களுக்கு வேலை வாங்கித்தரும் சல்மான் கான்!

ரசிகர்களுக்கு வேலை வாங்கித்தரும் சல்மான் கான்!

செய்திகள் 27-Jun-2014 9:53 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு மொழியின் சூப்பர் ஸ்டார்களும், முன்னணி ஹீரோக்களும் தங்களுடைய ரசிகர்களை ஒவ்வொரு விதத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் தங்களது ரசிகர்களை சமூக நற்பணி வேலைகளை செய்வதற்கும், சிலர் ரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்றவற்றை செய்வதற்கும் பயன்படுத்துவர். ஆனால் இதிலிருந்து கொஞ்சம் விலகி வித்தியாசமாக, ஹிந்தியின் ‘கலெக்ஷன் கிங்’ சல்மான் தன்னுடைய ரசிகர்களுக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

‘ஹியூமன் பீயிங்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பைத் தொடங்கி பலருக்கும் சல்மான் உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததுதான். இப்போது அந்த அமைப்புடன் இணைந்து தன்னுடைய ரசிகர்களுக்கு வேலை வாங்கித் தருவதற்காக வேலைவாய்ப்பு இணையதளம் ( www.beinghumanworkshop.com ) ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்கள் சிலரின் உதவியையும் நாடியுள்ளார் சல்மான் கான்.

இதுகுறித்து சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘சமூக வலைதளங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல் அதனை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம். நான் இறங்கியுள்ள இந்த முயற்சியில் நிச்சயம் என்னுடைய ரசிகர்கள் பலருக்கும் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய ரசிகர்களின் திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ப அவர்களுக்கு வேலை தரும்படி என்னுடைய நண்பர்கள் சிலரிடமும் பேசியிருக்கிறேன். அவர்களும் ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சல்மான் கானின் இந்த வித்தியாசமான நல்ல முயற்சிக்கு பல பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;