50-ஆவது நாளில் யாமிருக்க பயமே!

50-ஆவது நாளில் யாமிருக்க பயமே!

செய்திகள் 26-Jun-2014 1:24 PM IST VRC கருத்துக்கள்

ஏராளமான படங்களுக்கு மத்தியில் அதிக ஆர்பாட்டம், பரபரப்பு இல்லாமல் அமைதியாக வெளியாகி அதிரடி வெற்றியை பெற்றுள்ளது ‘யாமிருக்க பயமே’ திரைப்படம். ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து, டிகே இயக்கியுள்ள இப்படம் சென்ற மாதம் (மே) 9-ஆம் தேதி வெளியானது. த்ரில்லர், காமெடி படமாக எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்! அதற்கு அத்தாட்சி தான் இப்படம் இன்னமும் நிறைய திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது! இப்படம் வெளியாகி நாளை மறுநாள் 50-ஆவது நாளை எட்ட, மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் இப்பட டீம்! கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஓவியா, கருணாகரன் முதலானோர் நடித்த இந்தப் படத்தின் வெற்றி மற்ற சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;