‘எடக்கு’ பண்ணும் விஜய்சேதுபதி!

‘எடக்கு’ பண்ணும் விஜய்சேதுபதி!

செய்திகள் 26-Jun-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

‘ஏ.ஏ.கே.சினிமாஸ்’ எனும் புதுப்பட நிறுவனம் சார்பில் என்.வசந்த் தயாரிக்கும் படம் ‘எடக்கு’. மாறுபட்ட டைட்டிலைக் கொண்ட இப்படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதில் விஜய் சேதுபதியின் ’லுக்’கும் படு மிரட்டலாக இருக்கிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை எஸ்.சிவன் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் வசனங்களை உலகேஷ் குமார் எழுத, பாடல்களை முகிழ் நிலா, உவரி கா.சுகுமார், நிகரன் ஆகியோர் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு – சமன் மித்ரு, சண்டைப் பயிற்சி – ‘தவசி’ ராஜ், எடிட்டிங் - பாலு, தயாரிப்பு நிர்வாகம் – இ.எம்.எஸ்.ராஜா. இப்படத்தில் வேறு சிலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள் என்றாலும் விஜய்சேதுபதியை மையமாக வைத்து வரும் விளம்பரங்களை பார்க்கும்போது இப்படத்தில் அவருக்கு முக்கியமான, மாறுபட்ட கேரக்டர் போலும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;