ஆர்யா பட விழாவில் நயன்தாரா, த்ரிஷா!

ஆர்யா பட விழாவில் நயன்தாரா, த்ரிஷா!

செய்திகள் 26-Jun-2014 10:54 AM IST Top 10 கருத்துக்கள்

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்திருக்கும் ‘அமரகாவியம்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். இது குறித்து ஜீவா சங்கர் குறிப்பிடும்போது ‘‘இப்படம் என் குருவிற்கு சமர்ப்பணம்! அவர் ஒவ்வொரு படத்தையும் ஃப்ரேம் பை ஃப்ரேம் அழகாக எடுப்பார். அதுமாதிரி இப்படமும் இருக்கும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வித்தியாசமான முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் முதல் ஆடியோ சிடியை நடிகை நயன்தாரா வெளியிட இருக்கிறார். நடிகை த்ரிஷா பெற்றுக்கொள்ள இருக்கிறார்’’ என்றார். ‘அமரகாவியம்’ படத்தை ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா தயாரிக்க, ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;