’பாஹுபலி’ படப்பிடிப்பில் தமன்னா!

’பாஹுபலி’ படப்பிடிப்பில் தமன்னா!

செய்திகள் 26-Jun-2014 10:48 AM IST VRC கருத்துக்கள்

பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் அனுஷ்கா நடிப்பில், எஸ்.எஸ் .ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட படம் ’பாஹுபலி’. இப்படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் தமன்னாவும் நடிக்கிறார் என்ற தகவலை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆர்மபமானது. ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் ஆகிய இடங்களில் இப்படத்திற்கென பிரத்தியேக பிரம்மாண்ட செட்களை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் அமைத்துள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இங்கு படபிடிப்பை நடத்தி வரும் படக்குழுவினர், இந்த வருட இறுதி வரை இந்த அரங்குகளில் படபிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

‘ஆர்கா மீடியா ஒர்க்ஸ்’ தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு (2015) கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் வரும் போர் காட்சிகளை சர்வதேச தரத்தில் உருவாகும் படங்களுக்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களால் வடிவமைக்கப் பட்டு வருகிறது. இந்தப் படத்தின் இசையை எம்.எம்.கீரவாணியும், ஒளிப்பதிவை செந்திலும் மேற்கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;