ஹாலிவுட்டில் படமாகும் மோகன்லாலின் ‘பெருச்சாழி’

ஹாலிவுட்டில் படமாகும் மோகன்லாலின் ‘பெருச்சாழி’

செய்திகள் 25-Jun-2014 12:35 PM IST VRC கருத்துக்கள்

தமிழில், ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘கல்யாண சமையல் சாதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது இயக்கி வரும் மலையாள படம் ‘பெருச்சாழி’. இப்படத்தில் கதையின் நயகனாக, அரசியல்வாதியாக மோகன்லால் மாறுபட்ட பல கெட்-அப்களில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனைகளையும், அரசியலையும் ஜனரஞ்சகமான முறையில் சொல்லும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்துள்ளது. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் சில காட்சிகளை ஹாலிவுட்டின் பிரபலமான யுனிவர்சல் ஸ்டுடியோவிலும் படமாக்கி வருகிறார்கள். இந்த ஸ்டுடியோவில் இதுவரை எந்த ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை. யுனிவர்சல் ஸ்டுடியோவில் படமாகும் முதல் மலையாள படம் என்ற பெருமை இப்போது ‘பெருச்சாழி’க்கு கிடைத்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஷான் ஜேம்ஸும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். ‘பெருச்சாழி’ தமிழிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;