'சைவம்’ படம் அல்ல, பாடம்!

'சைவம்’ படம் அல்ல, பாடம்!

செய்திகள் 25-Jun-2014 11:26 AM IST Inian கருத்துக்கள்

இயக்குனர் விஜய் தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘சைவம்’. இப்படத்தை ‘ரெட்ஜெயன்ட் மூவீஸ்’ வருகிற 27-ஆம் தேதி வெளியிடுகிறது. முன்னாள் நடிகையும், நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலா சமீபத்தில் ‘சைவம்’ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்தார். அதன் பிறகு அவர் படம் குறித்து கூறியதாவது, ‘‘குழந்தை நட்சத்திரம் சாராவின் நடிப்பு பாராட்டத்தக்கது. இப்படம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாடமாகும். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை இப்படம் அழகாக வெளிபடுத்தியுள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது’’ என்றார்.

அமலா, விலங்குகள் நலம் காக்கும் தொண்டு அமைப்பில் இணைந்து விலங்குகள் மீது பாசம் காட்டி தொண்டு செய்து வருபவர் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மா கணக்கு - டிரைலர்


;