திரைப்படமாகும் சுஜாதா கதைகள்!

திரைப்படமாகும் சுஜாதா கதைகள்!

செய்திகள் 25-Jun-2014 10:03 AM IST VRC கருத்துக்கள்

சென்னையை சேர்ந்த பிக்சல் கிராஃப்ட் ஸ்டுடியோஸ் நவீன தொழில் நுட்ப கலைகளில் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். அந்த நிறுவனம் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய முழு நீள திரைப்படமாக ஆக்க இருக்கிறார்கள்.

தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளி வந்தபோது எல்லோரையும் கவர்ந்த 'என் இனிய எந்திரா ' மற்றும் 'மீண்டும் ஜீனோ' கதைகள் இரண்டும் ரசிகர்கள் கண்டு களிக்க திரைப்படமாக உருவெடுக்கிறது. இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் என்பதை நமக்கு கண்முன் காட்டியது .விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த கால கட்டமே சிறந்த காலம், என தெரிவித்தார் பிக்செல் கிராஃப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும் , இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த்.

Virtual graphics என்ற தொழில் நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்து விட்டு, இடம் , பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில் நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப் படம் எடுப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த். மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படும் ‘என் இனிய எந்திரா' படத்திற்கு நாற்பது கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிட்டுள்ளது. சென்னை தவிர , இங்கிலாந்தில் ‘Pirates of the Caribbean’, ‘Iron man 2’, மற்றும் ‘ கோச்சடையான்’ படங்களின் மோஷன் கேப்சர் டெக்னாலஜி வல்லுனர்கள் இயங்கும் Centroid motion capture ஸ்டுடியோவிலும் இப்படத்தின் வேலைகள் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெறி ( திமிரு-2) - டீசர்


;