‘கத்தி’ ஃபர்ஸ்ட் லுக் சாதனை!

‘கத்தி’ ஃபர்ஸ்ட் லுக் சாதனை!

செய்திகள் 24-Jun-2014 5:30 PM IST VRC கருத்துக்கள்

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களின் உச்ச எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சென்ற 22-ஆம் தேதி வெளியானது. ‘கத்தி’ படக் குழுவினர் உருவாக்கியுள்ள இந்த மோஷன் போஸ்டர் ஒரு அமெரிக்க விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி என்று சில இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி, ஒரு புறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும், விஜய் ரசிகர்கள், ‘கத்தி’ ஃபர்ஸ்ட் லுக்குக்கு வழக்கம் போல பெரும் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து, அதாவது கிட்டத்தட்ட 3 நாட்களில் இதுவரை சுமார் 6 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ மோஷன் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பைப் போலவே இப்போது விஜய்யின் ’கத்தி’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;