இசையரசர்கள் பிறந்த நாள் இன்று!

இசையரசர்கள் பிறந்த நாள் இன்று!

செய்திகள் 24-Jun-2014 1:17 PM IST Inian கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை தந்த பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்! அது மாதிரி என்றென்றும் நினைவில் நிற்கும் ஏராளமான படங்களுக்கு, பாடல்களுக்கு இசை அமைத்து எல்லோராலும் ‘மெல்லிசை மன்னர்’ என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர்களில் கவியரசு கண்ணதாசன் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரது கருத்துமிக்க பாடல் வரிகள் இன்னமும் ரசிகர்களின் மனங்களில் இருந்து கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் இசையுலகில் சக்கரவர்த்திகளாக திகழ்ந்து வந்த கண்ணதாசான், எம்.எஸ்.வி. ஆகியோரது இசையும், பாடல்களும் இன்றும் ஒலிக்காத எஃப்.எம்.ரேடியோவோ, தொலைக்காட்சி சேனல்களோ இருக்க முடியாது என்றே சொல்லலாம்! நம் மனதை விட்டு நீங்காத ஏராளமான பாடல்களை தந்த இந்த இசையரசர்கள் பிறந்த நாள் இன்று! இந்நாளில் மறைந்த கவியரசு கண்ணதாசனை நினைவு கூர்வதிலும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதிலும் ‘டாப் 10 சினிமா’ பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யாமிருக்க பயமே டிரைலர்


;