ஜூலை 5-ல் ‘அஞ்சான்’ டீஸர்!

ஜூலை 5-ல்  ‘அஞ்சான்’ டீஸர்!

செய்திகள் 24-Jun-2014 12:59 PM IST Top 10 கருத்துக்கள்

ஒரு சில நாட்களுக்கு முன்பு ‘அஞ்சான்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும இப்படத்தில் சூர்யாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சமந்தா! இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து எப்போது டீஸரை பார்க்க முடியும்? என்ற கேள்வியோடு இருந்தார்கள் சூர்யாவின் ரசிகர்கள்! அவர்களது ஏக்கத்தை போக்கும் வகையில் ’அஞ்சான்’ பட டீஸர் ஜூலை 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது! இதை ‘அஞ்சான்’ பட இயக்குனர் லிங்குசாமி ட்விட்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆக, இன்னும் சில நாட்களின் அஞ்சானை காண தயாராக இருங்கள்!

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதி செய்திருக்கிறார். ’அஞ்சான்’ ஆக்ஸ்ட்-15 வெளியீடு என்பது எல்லோருக்கும் தெரியும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;