ஹாரிஸ் ஜெயராஜுக்கு பாடல் எழுதிய இயக்குனர்!

ஹாரிஸ் ஜெயராஜுக்கு பாடல் எழுதிய இயக்குனர்!

செய்திகள் 24-Jun-2014 12:56 PM IST Inian கருத்துக்கள்

ஒட்டு மொத்தத் தமிழ் சினிமாவையும் நக்கலடித்து ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தை இயக்கி பெயர் பெற்றவர் சி.எஸ்.அமுதன். இவர் தற்போது ‘ரெண்டாவது படம்’ என்ற தலைப்பில் படம் இயக்கி வருகிறார். தற்போது தனுஷ், அமிரா தஸ்தூர் இணைந்து நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதனை ஒரு பாடல் எழுத வைத்துள்ளனர் ‘அனேகன்’ படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்தும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.
‘போதுமடா சாமி நைன் டு ஃபைவ் போராட்டம்…’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரியும் இளைஞர்களின் மனதை பிரதிபலிக்கும்படி இருக்குமாம்! ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முதலாக இசையமைப்பாளாராக அறிமுகமான ‘மின்னலே’ படத்தில் ‘மேடி மேடி…’ என்ற பாடலை சி.எஸ்.அமுதன் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;