மகிழ்ச்சியில் விஷால்!

மகிழ்ச்சியில் விஷால்!

செய்திகள் 24-Jun-2014 12:23 PM IST Inian கருத்துக்கள்

‘யுடிவி’ தயாரிப்பில், விஷால், லக்‌ஷ்மி மேனன் நடிப்பில், திரு இயக்கத்தில் வெளிவந்த படம் ‘நான் சிகப்பு மனிதன்’. திடீரென தூங்கிவிழும் வித்தியாசமான ஒரு நோயை வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் தமிழில் வெளியாகி பலவிதமான விமர்சனங்களுடன் சுமாரான வெற்றியே பெற்றது! இப்படத்தின் தெலுங்கு பதிப்பு ‘இந்துருடு’ என்ற பெயரில் கடந்த வாரம் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மொத்த மீடியாக்களும் ‘இந்துருடு’ படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் இயக்குனர் திருவும், விஷாலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;